உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்

அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்

அனுப்பர்பாளையம் : திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா அன்னதானம் வழங்கல் மற்றும் கட்சி கிளை அலுவலகம் திறப்பு விழா திருப்பூர், பி.என்., ரோடு அண்ணா நகரில் நடைபெற்றது.திருப்பூர் மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் பட்டுலிங்கம் வரவேற்றார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் விஜயகுமார், ஆனந்தன், முன்னாள் எம்.பி., சிவசாமி, எம்.எல்.ஏ., குணசேகரன், நிர்வாகிகள் சாமிநாதன், மகாராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ