உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுஅறிவு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பொதுஅறிவு புத்தகம் வழங்கல்

உடுமலை; முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரசும், தனியார் அமைப்புகளும், பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில், நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, அவர்கள் மேம்பட வாய்ப்பு ஏற்படுகிறது. முன்னாள் ராணுவ வீரர் நல சங்கத்தின் சார்பில், ஆண்டுதோறும் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழஙகப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில், நடப்பாண்டில் இதையொட்டி, மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் பொது அறிவு மற்றும் எண் சுவடி நுால்கள் வழங்கப்பட்டன. சங்க செயலாளர் நாயப்சுபேதார் நடராஜ், பள்ளி தலைமையாசிரியர் சதீஷ்குமாரிடம் நுால்களை வழங்கினார். பின்னர் மாணவர்களுக்கு இந்த நுால்கள் வினியோகிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி