உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட சைக்கிள் போட்டி; கருவலுார் அரசு பள்ளி அசத்தல்

மாவட்ட சைக்கிள் போட்டி; கருவலுார் அரசு பள்ளி அசத்தல்

திருப்பூர்; திருப்பூர், கோவில்வழியில், மாவட்ட சைக்கிள் போட்டி நடந்தது. பிரன்ட்லைன் பள்ளி முன் போட்டியை, நல்லுார் போலீஸ் உதவி கமிஷனர் தையல்நாயகி துவக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் ஒருங்கிணைத்தார். கோவில் வழி முதல் அமராவதிபாளையம் வரை சைக்கிள் போட்டி நடந்தது. இதில், மாவட்டம் முழுதும் இருந்து, மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர். மாணவர், 14 வயது பிரிவில் கிேஷார் (ஜெயம் வித்யா பவன் மெட்ரிக்) முதலிடம், 17 வயது பிரிவில் ஹரிஷ் (ஆர்.ஜி., மெட்ரிக்), 19 வயது பிரிவில் கிருத்திக் (கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி) முதலிடம் பெற்றனர். மாணவியர் 14 வயது பிரிவில், சுவஸ்திகா (இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்), 17 வயது பிரிவில் மதுஸ்ரீ (கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி), 19 வயது பிரிவில், ஹர்சிதா (இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக்) ஆகியோர் முதலிடம் பெற்றனர். முதலிடம் பெற்ற, ஆறு பேரும் மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை