மேலும் செய்திகள்
பால்பேட்மின்டன் போட்டி அரசு பள்ளிகள் அபாரம்
26-Oct-2025
திருப்பூர்: மாவட்ட மாணவியர் கோ - கோ போட்டியில், 14 மற்றும் 19 வயது இரண்டு பிரிவிலும், காங்கயம் கார்மல் அரசு மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று அசத்தியது. பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட மாணவியர் கோ - கோ போட்டி, அணைப்புதுார், ஏ.கே.ஆர். அகாடமி பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளி முதல்வர் கணேசன் துவக்கி வைத்தனர். காங்கயம் கார்மல் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.மாவட்டத்தின் ஏழு குறுமையங்களில் இருந்து, 21 அணிகள், 252 வீராங்கனையர் பங்கேற்றனர். பதிநான்கு வயது, இறுதி போட்டியில், காங்கயம், கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, 10 - 11 என்ற புள்ளிக்கணக்கில், தாராபுரம், லயன்ஸ் மெட்ரிக் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவு, இறுதி போட்டியில், ஊதியூர், சாந்தி நிகேதன் பள்ளி அணி - முத்துார், ஸ்ரீ ஆனுார் மெட்ரிக் பள்ளி அணிகள் மோதின. 8 - 1 என்ற புள்ளிக்கணக்கில், ஊதியூர், சாந்தி நிகேதன் பள்ளி அணி வெற்றி பெற்றது. பத்தொன்பது வயது பிரிவு, இறுதி போட்டியில், காங்கயம், கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி - ஊதியூர், சாந்தி நிகேதன் பள்ளி அணிகள் மோதின. 13 - 10 என்ற புள்ளிக்கணக்கில், கார்மல் பள்ளி அணி வெற்றி பெற்றது. மாவட்ட போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளும், மாநில போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
26-Oct-2025