உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட பெண்கள் கபடி போட்டி: உடுமலை அணி சாம்பியன்ஷிப்

மாவட்ட பெண்கள் கபடி போட்டி: உடுமலை அணி சாம்பியன்ஷிப்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில், மாவட்ட அளவிலான இளையோர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டி திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்ட அளவிலான 20 அணிகள் பங்கேற்றன. இதில், உடுமலை வி.ஆர்.டி., அணி மற்றும் திருமுருகன்பூண்டி 'வி' ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று மாலை இறுதிப் போட்டி நடந்தது. இதில், 43 - 42 என்ற புள்ளிக்கணக்கில், உடுமலை வி.ஆர்.டி. அணி வெற்றி பெற்று முதல் பரிசையும், சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றது. முதல் பரிசு 20 ஆயிரம் ரூபாய் அந்த அணிக்கும், இரண்டாமிடம் பெற்ற திருமுருகன்பூண்டி அணிக்கு, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் 3 மற்றும் 4வது இடத்தை பாரதி நகர், சுவாமி விவேகானந்தா மற்றும் திருமுருகன்பூண்டி ஏ.பி.ஜே. அணிகள் பிடித்தன. அந்த அணிகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. கால் இறுதி போட்டியில் இரண்டாமிடம் பெற்ற கருமாரம்பாளையம் அக்னி சிறகுகள் அணி; 15 வேலம்பாளையம் இளஞ்சிட்டு அணி; எஸ்.பெரியபாளையம் இளந்தமிழன் அணி மற்றும் பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அணி ஆகியவற்றுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை