உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி நிலையங்களில் தீபாவளி கொண்டாட்டம்

கல்வி நிலையங்களில் தீபாவளி கொண்டாட்டம்

திருப்பூரில் உள்ள கல்வி நிலையங்களில் தீபாவளி திருவிழா கொண்டாடப்பட்டது. கிட்ஸ் கிளப் திருப்பூர், கிட்ஸ் கிளப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீபாவளி திருவிழா கொண்டாடப்பட்டது. தீபாவளி தொடர்பான பாடல், நடனம், நாடக நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர். பள்ளி தலைவர் மோகன் கார்த்திக், தாளாளர் வினோதினி கார்த்திக், செயலாளர் நிவேதிகா, நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிக்கில் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.வி.பி., பள்ளி காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. பண்டிகை குறித்து விளக்கும் வகையில் நாடகம், நடனம், பேச்சு போன்ற மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பொருளாளர் லதா கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஷ் தீபாவளி தின சிறப்புரை நிகழ்த்தினார். மாணவர் மன்றத்தினர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை