வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஓகே. அடுத்த ஏமாளித்தனத்துக்கு ரெடி ஆகுங்க.
எல்லோரும் நல்லவங்கதான் சூழ்நிலை மாத்திடுது
வங்கிகளே ஏமாற்றுகின்றன. தனி மனிதர்களை நம்பி ஏமாறும் இவர்களை என்ன செய்வது. எவ்வளவு சொன்னாலும், பட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
திருப்பூர், : திருப்பூரில் தீபாவளி சீட்டு நடத்தி, தலைமறைவானவரை கண்டுபிடிக்க கோரி, பணம் செலுத்தியவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர், மண்ணரை, சத்யா காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45. கருமாரம்பாளையத்தில், 'ஸ்ரீ பரமேஸ்வரா சிட்ஸ்' என்ற சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறார். வாரந்தோறும், 200 ரூபாய் செலுத்தினால், தீபாவளியின் போது, வட்டியுடன் முதிர்வு தொகை, தீபாவளி பரிசு, பலகாரம் போன்றவை வழங்கப்படுவதாக அறிவித்தார். ஈரோடு, குமாரபாளையம் மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தினர்.தீபாவளி நெருங்குவதால், முதிர்வு தொகை கேட்டு, நேற்று முன்தினம் மாலை பலரும் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு செந்தில்குமார் இல்லை. மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சீட்டு செலுத்தியவர்கள் நேற்று காலை அவரது அலுவலகம் முன், ஊத்துக்குளி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து தீர்வு காணுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஏமாந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ.,
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஒருவரும், அவரது மனைவியும் சீட்டு போட்டுள்ளதோடு, 600 பேரை இத்திட்டத்தில் இணைத்துள்ளனர். 'இரண்டாண்டாக முதிர்வு தொகையை முறையாக அளித்தார். எங்களை நம்பி பணம் செலுத்தியோருக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை' என தம்பதியர் அதிர்ச்சியில் உள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் பலரும் இத்திட்டத்தில் பணம் செலுத்தியுள்ளனர். சிலருக்கு தேதி குறிப்பிடாமல் காசோலை வழங்கியுள்ளார்.
ஓகே. அடுத்த ஏமாளித்தனத்துக்கு ரெடி ஆகுங்க.
எல்லோரும் நல்லவங்கதான் சூழ்நிலை மாத்திடுது
வங்கிகளே ஏமாற்றுகின்றன. தனி மனிதர்களை நம்பி ஏமாறும் இவர்களை என்ன செய்வது. எவ்வளவு சொன்னாலும், பட்டாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.