உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தி.மு.க. மீது வழக்கு பதிவு!

 தி.மு.க. மீது வழக்கு பதிவு!

பல்லடம்:பல்லடம் அருகே, தி.மு.க., சார்பில் நடந்த செயல்வீரர்கள் கூட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டதாகவும், அதில், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும், இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, 2 நாள் முன் நடந்த தி.மு.க., தேர்தல் பணிமனை திறப்பு விழாவின் போது, அனுமதியின்றி, ரோட்டில் கட்சிக் கொடிகள் கட்டப்பட்டதாக மற்றொரு வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து, நேற்று முன்தினம், பல்லடம் - திருப்பூர் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், அனுமதியின்றி பட்டாசு வெடித்தது மற்றும் பங்கேற்றவர்களுக்கு பனியன் (டி-சர்ட்) வழங்கியது ஆகிய காரணங்களுக்காக, தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு, கடந்த, 10 நாளில் மட்டும், தொடர்ந்து மூன்று வழக்குகள் தி.மு.க., மீது பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை