உள்ளூர் செய்திகள்

தி.மு.க., செயற்குழு

திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடந்தது.அவைத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ் முன்னிலை வகித்தனர். சார்பு அணி நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய பணிகளில் தேர்தல் ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்களுடன் இணைந்து கட்சியின் பூத் ஏஜன்ட்கள் செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியல் முகாம் குறித்த நடவடிக்கைகளை பதிவு செய்து மாவட்ட தலைமைக்கு உடனுக்குடன் அனுப்ப வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை