உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிறமூட்டிகள் கலந்த பழச்சாறு தவிர்க்க டாக்டர்கள் அறிவுரை

நிறமூட்டிகள் கலந்த பழச்சாறு தவிர்க்க டாக்டர்கள் அறிவுரை

உடுமலை:உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், தள்ளுவண்டிகளில், ஜூஸ் கடைகள் துவங்கப்பட்டுள்ளன.இந்த கடைகளில், 'ப்ரூட் மிக்சர்' என்ற பானம் விற்பனை செய்யப்படுகிறது. வாழைப்பழத்தைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த ப்ரூட் மிக்சரில், உடலுக்கு கேடு விளைவிக்கும், பல ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுவதாக புகார் எழுகிறது.டாக்டர்கள் கூறியதாவது: இத்தகைய பானங்களில், சிலர், ரசாயனங்களையும் சேர்க்கின்றனர். குறிப்பாக, இனிப்பு சுவைக்காக 'சாக்ரின்' எனப்படும் செயற்கை இனிப்பூட்டி பயன்படுத்தப்படுகிறது. இது வயிற்று உபாதையை ஏற்படுத்தும். பானத்தில், செயற்கை நிறமூட்டிகளும் சேர்க்கப்படுவதால், செரிமான கோளாறு ஏற்படுவதுடன், நரம்புக்கோளாறுகள், தோல் சம்பந்தமான பிரச்னைகள் உண்டாகும்.ஒவ்வொரு பழமும், தனிச்சுவையும் சத்து நிறைந்ததாகும். அதனை தனியாக சாப்பிட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். இதுபோன்ற பானங்களை தவிர்த்து, பழங்களை சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது. அதற்கு மாறாக, இளநீர், மோர் அருந்துவது மிகவும் நல்லது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை