சரிபார்க்க மறவாதீர்!
இறுதி வாக்காளர் பட்டியல், மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. https://voters.eci.gov.inஎன்கிற தேர்தல் கமிஷனின் இணையதளத்திலும், ECI NET என்கிற மொபைல் செயலி வாயிலாக அல்லது 1950 என்கிற எண்ணில் மாவட்ட தேர்தல் உதவி மைய எண்ணில் அழைத்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என தெரிந்துகொள்ளலாம். ஏதேனும் தவறுகள் இருப்பின், பி.எல்.ஓ. வாயிலாகவோ, ஆன்லைனிலோ உடனடியாக திருத்தத்துக்காக விண்ணப்பிக்க வேண்டுமென, தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.