உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பக்கவாதம் வந்தால் பயப்பட வேண்டாம்! உடனடி சிசிச்சை அளித்தால் குணமடையலாம்

பக்கவாதம் வந்தால் பயப்பட வேண்டாம்! உடனடி சிசிச்சை அளித்தால் குணமடையலாம்

திருப்பூர்: உலக பக்கவாத தினத்தை சிறப்பிக்கும் வகையில் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், கலெக்டர் மனிஷ்நாரணவரே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைமை விருந்தினராக மூத்த மருத்துவர் முருகநாதன், நரம்பியல் மருத்துவர்கள் குணசேகரன், வளவன் சிவக்குமார், ரம்யா, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ரமேஷ், விஜய் ஆனந்த், சந்திரமோகன், ரேவதி மெடிக்கல் சென்டர் சேர்மன் ஈஸ்வரமூர்த்தி, நரம்பியல் மருத்துவர் சிவக்குமார், மருத்துவ இயக்குனர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர். ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் ஈஸ்வரமூர்த்தி பேசுகையில், ''பக்கவாத நோய் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பயம் கொள்ள தேவையில்லை. உடனடி சிகிச்சை அளித்தால் பக்கவாதம் நோயில் இருந்து குண மடையலாம். மூளை நரம்பியல் மற்றும் பக்கவாத சிகிச்சைக்கு திருப்பூரின் முன்னணி மருத்துவ மையமாக நாங்கள் உள்ளோம்,'' என்றார். ரேவதி மெடிக்கல் சென்டர் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சிவக்குமார் கூறியதாவது:பக்கவாத சிகிச்சைக்கு நேரம் முக்கியம்; தாமதிக்க கூடாது. 'கோல்டன்ஹவர்' சிகிச்சை உடனடியாக துவங்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, புகை மற்றும் மதுபழக்கம் உடற்பயிற்சி இல்லாமை மற்றும் இதய நோய் போன்ற காரணங்களால் பக்கவாதம் வருகிறது. பக்கவாதம் ஏற்பட்டவுடன் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. மூலம் கண்டறிந்து, சிகிச்சை துவங்க வேண்டும். சிகிச்சை, சந்தேகம், முன்பதிவுக்கு 98422 11116 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி