உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை

திருப்பூர்; ''இயற்கை (சுக) பிரசவம் என்பது வேறு; வீட்டு பிரசவம் என்பது வேறு. அதனை தவறாக புரிந்து கொள்ள கூடாது.வீடுகளிலேயே பிரசவம் பார்க்கும் போது திடீரென ஏற்படும் சிக்கலான நிலையை சமாளிக்க முடியாது. தாய், சேய் இருவரின் உயிருக்கும் ஆபத்தான நிலையாக அது முடிந்து விடும். பத்து சதவீத பிரசவங்களில், திடீரென மருத்துவ சிக்கல்களை ஏற்படும் வாய்ப்புகள் நிறைந்துள்ளது. குறிப்பாக, பிரசவத்தின் போது, தாய்க்கு ரத்தபோக்கு, நோய்த்தொற்று, குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் கடைசியில் ஏற்படலாம்.அனைத்தும் தெரிந்தும், ஒரு வேளை எந்த பாதிப்பும் இன்றி பிரசவம் நிகழ்ந்தாலும், கிருமித்தொற்றுக்குள்ளாகி பல்வேறு நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் வீட்டிலேயே சுயபிரசவம் செய்து கொள்வது தாய், சேய் இருவரது உயிருக்கும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு உள்ளது எனவே, வீடுகளில் பிரசவம் பார்ப்தை ஊக்குவிக்க கூடாது; இது போன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு போதிய விழிப்புணர்வை அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை ஏற்படுத்த வேண்டும்,' என, பொது சுகாதாரத்துறை இயக்குனரகம், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை