உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிநீர் பிரச்னை தீர்ந்தது; கிராம மக்கள் நிம்மதி

குடிநீர் பிரச்னை தீர்ந்தது; கிராம மக்கள் நிம்மதி

பொங்கலுார்: பொங்கலுார் ஊராட்சி பகுதிகளுக்கு அத்திக்கடவு திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. தொலைதுார பகுதிகளுக்கு அத்திக்கடவு குடிநீர் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஊராட்சிகள் குடிநீர் தேவைக்கு நிலத்தடி நீரை நம்பியே உள்ளன. கடந்த சில மாதங்களாக கடும் வறட்சி நிலவியதால் நிலத்தடி நீர்மட்டம் வற்றத் துவங்கியது. இதனால், பல ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னை தலைதுாக்கியது. இது ஊராட்சி நிர்வாகங்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இந்நிலையில், தற்போது தொடர் மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயரத் துவங்கி உள்ளது. இதனால், ஆழ்குழாய் கிணறு களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஊராட்சிகள் குடிநீர் பிரச்னையிலிருந்து தற்காலிகமாக தப்பி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ