உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்களை அச்சுறுத்தும் போதை ஆசாமிகள்

மக்களை அச்சுறுத்தும் போதை ஆசாமிகள்

அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் நேற்று வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த மனு:வேலம் பாளையம் அரசு மருத்துவமனை அருகில் கஞ்சா மற்றும் போதை சம்மந்தமான பொருட்களை உட் கொள்ளும் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கடந்த 1ம் தேதி வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் போதை நபர்களால் தாக்குதலுக்கு உள்ளானார்.இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வரும் பெண்கள் மற்றும் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லுாரி மாணவிகளை அந்த கும்பல் கேலி கிண்டல் செய்து, சமூக பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்கின்றனர்.போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை