மேலும் செய்திகள்
அமெரிக்க ரோட்டரி நல்லெண்ண தூதர்கள் மதுரை வருகை
11-Jan-2025
திருப்பூர்; இன்டராக்ட் கிளப் பாலபவன் மற்றும் திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம், 3,141 மற்றும், 3,055 இணைந்து ஊக்கமளிக்கும் 'விமுக்தி யாத்ரா' கார் பயணம் மேற்கொண்டனர்.இன்ட்ராக்ட் கிளப் உறுப்பினர்களான மும்பை ரோட்டரி சங்கத்தை சேர்ந்த டாக்டர் ஹர்ஷத் உதேஷி, டாக்டர் சித்தார்த் உதேஷி மற்றும் விஷால்பட்வா ஆகியோர் போதை பொருள் தடுப்பு, டிஜிட்டல் மயமாக்கல், புகையிலை மற்றும் மனநலம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பேசினர். இக்குழுவினர் ஒரு மாதத்தில், 17 மாநிலங்கள், 26 ரோட்டரி மாவட்டங்கள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க தலைவர் மோகனசுந்தரம், பொருளாளர் ராம்குமார் பாலாஜி, முன்னாள் தலைவர் சக்திவேல், ஜெயமூர்த்தி, பள்ளியின் தாளாளர்கள் மாலதி, முத்துரத்தினம், சக்தி மிருதுளா தலைமை வகித்தனர்.
11-Jan-2025