உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்

அனுமதியற்ற ஆலைகள் மீது பாயட்டும் நடவடிக்கை! பொங்கியெழும் சாய ஆலைகள்

திருப்பூர், ; ''முறையான அனுமதி பெறாமல் இயங்கும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அத்தகைய ஆலைகளுக்கு, சாயம் மற்றும் கெமிக்கல் விற்பதை தவிர்க்க வேண்டும்,'' என, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் பேசினார். திருப்பூர் சாய ஆலை உரிமையாளர் சங்கத்தில், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் தலைமை வகித்து பேசியதாவது:அனுமதி இல்லாமல் இயங்கி வரும் சாய ஆலைகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதி இல்லாமல் இயங்கும் சாய ஆலைகளுக்கு, சாயம் மற்றும் கெமிக்கல் விற்பதை தவிர்க்க வேண்டும். பின்னலாடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் ஆலைகளுக்கு, 'ஜாப் ஒர்க்' ஆர்டர்களை முழுமையாக கொடுத்து ஆதரிக்க வேண்டும். சாயமிடும் கட்டணங்களை குறிப்பிட்ட கால வரையறைக்குள் கொடுத்து உதவ வேண்டும். அப்போதுதான், பின்னலாடை உற்பத்தி துறையில் ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். இவ்வாறு, காந்திராஜன் பேசினார்.சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி முன்னிலை வகித்தார். சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க தலைவர் நாகேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். சாயத்தொழில் வளர்ச்சிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, இருதரப்பினரும் ஆலோசித்தனர்.''முறையான அனுமதி இல்லாமல் ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகளால், திருப்பூரில் 'ஜீரோ டிஸ்சார்ஜ்' சுத்திகரிப்பு பணியை முழுமையாக செய்ய முடிவதில்லை. சாய ஆலைகள், 'ஜாப் ஒர்க்' ஆர்டர் பெறுவது சவாலாக உள்ளது'' என்று சாய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.சாய ஆலை உரிமையாளர்கள் சங்க பொருளாளர் மாதேஸ்வரன், திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல்ஸ் வியாபாரிகள் சங்கச் செயலாளர் செந்தில், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.---திருப்பூர் சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சாய ஆலை உரிமையாளர் சங்க தலைவர் காந்திராஜன் தலைமையில் நடந்தது. சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரிகள் சங்க தலைவர் நாகேஷ், சாய ஆலை உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் முருகசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இலவச பயிற்சி; வேலை உறுதி

''சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தில் இயங்கி வரும், பயிற்சி மையம் வாயிலாக, 'லேப் டெக்னீசியன்' வேலைக்கு உறுதியான வேலைவாய்ப்புடன் ஒரு மாத கால இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில் முனைவோர், இதுகுறித்து தங்களது நண்பர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'' என்று சாய ஆலை உரிமையாளர் சங்கத் தலைவர் காந்திராஜன் கூறினார்.

சாயங்கள் விலை நிர்ணயம்

ஆலைகளின் எதிர்பார்ப்பு''சாயங்கள் விலையை முன்னறிவிப்பின்றி நிர்ணயிக்க வேண்டாம்; குறிப்பிட்ட இடைவெளியில், விலை உயர்வு செய்யலாம். சாயம் விலை, ஆண்டுக்கு இருமுறை மட்டும் மாற்றி அமைத்தால், சாயமிடும் கூலி நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சாய ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சாயம் மற்றும் கெமிக்கல் விலை, அந்தந்த நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது; இருப்பினும், பரஸ்பரம் ஆலோசித்து விலை நிர்ணயித்து வருவதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Murali
டிச 28, 2024 10:48

Like GST number, each unit can be allocated a number for the PCB approval, so that any one the PCB approval number alone will be given job work order. Without that no one should give job work. If this is implemented will be useful for all


புதிய வீடியோ