முதலிபாளையம் பாறைக்குழியில் சாயக்கழிவு
திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவினர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி சார்பில், முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பைக் கொட்டியதால் ஏற்பட்டுள்ள கொடூரமான சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த, மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினரின் ஆய்வறிக்கையை ஐகோர்ட் கவனத்துக்கு கொண்டு சென்றோம். எனவே, அங்கு குப்பை கொட்ட ஐகோர்ட் தடை விதித்துள்ள நிலையில், தற்போதும் தடை நீடிக்கிறது. அங்கு மாநகராட்சி கழிவுடன், சாயக்கழிவும் கலந்திருக்கிறது என்ற ஆய்வின் முடிவையும், கோர்ட் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். இதற்கிடையில், இடுவாய் பகுதியில் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டும் நடவடிக்கைக்கு எதிராக, நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நேற்று இந்த மனுக்கள் மீது நடந்த விசாரணைக்கு பின், வழக்கு விசாரணை, மீண்டும், 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இடுவாய் பகுதியில் மாசுகட்டுப்பாடு வாரியத்தினர் ஆய்வு மேற்கொள்ளவும் ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.