மேலும் செய்திகள்
மகளிர் உரிமைத்தொகை; ஒரே நாளில் 2,491 விண்ணப்பம்
17-Jul-2025
உடுமலை; உடுமலை, ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடந்து வருகிறது.இதில், மகளிர் உரிமை தொகை கோரி விண்ணப்பங்கள் அதிகளவு வருகிறது. கடந்த முறை, தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஏராளமான பெண்கள், உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க அரசிடமிருந்து எப்போது அறிவிப்பு வரும் என காத்திருந்தனர். தற்போது, விதிமுறைகளை அரசு தளர்த்தியுள்ளது.அரசு திட்டங்களில் மானியம் பெற்று கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில், ஓய்வூதியர் அல்லாத தகுதியுள்ள வேறு பெண்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதியுள்ளோர், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மட்டுமே, உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் நடக்கும் முகாம்களில், மகளிர் உரிமை தொகை கோரும் விண்ணப்பங்கள் அதிகளவு வருகிறது.இதனையடுத்து, அனைத்து முகாம்களிலும், மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு கவுன்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
17-Jul-2025