உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எளிதாக வங்கிக்கடன்: ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

எளிதாக வங்கிக்கடன்: ஏற்றுமதியாளர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; ''வங்கிக்கடன் எளிதாகவும், சரியான நேரத்திலும், போதுமான அளவிலும் கிடைக்க நடவடிக்கை தேவை'' என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தினர்.ஸ்டேட் வங்கி சார்பில், ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, திருப்பூரில் நடந்தது. வங்கி பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா தலைமை வகித்தார்.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல், துணை பொது மேலாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசினார்.ஏற்றுமதியாளர்கள் பேசியதாவது:ஏற்றுமதியாளர்களின் முக்கிய எதிர்பார்ப்பு, ஏற்றுமதிக் கடன் சரியான நேரத்தில் மற்றும் போதுமான அளவில் கிடைக்க வேண்டும். கடன் வரம்புகளில் அதிகரித்த நெகிழ்வுத்தன்மை மற்றும் குறைக்கப்பட்ட ஆவணச் சுமைகளுடன், குறிப்பாக குறு, சிறு நிறுவனங்களுக்கு,எளிதாக கடன் வசதி கிடைக்க வேண்டும்.உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்த, பசுமை முயற்சிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட நிதித் திட்டங்களையும், தானியங்கிமயம், டிஜிட்டல்மயமாக்கல் போன்ற நடவடிக்கைகளில் உதவி கிடைக்க வேண்டும்.இந்தியாவை 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்க திருப்பூர் கிளஸ்டர் தயாராக உள்ளது. இந்தப் பயணத்தை தனியாக மேற்கொள்ள முடியாது. அடிப்படை யதார்த்தங்களைப் புரிந்துகொண்டு, நெகிழ்வான, புதுமையான மற்றும் எதிர்காலத்திற்கான நிதி தீர்வுகளுடன், ஸ்டேட் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் உதவ வேண்டும்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மீள் மற்றும் போட்டித்தன்மையுடன் எதிர்கால வளர்ச்சிக்கு தயாராக இருக்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.----2 படங்கள்ஸ்டேட் வங்கி சார்பில் திருப்பூரில் ஏற்றுமதியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தினர்;ஏ.இ.பி.சி., துணைத்தலைவர் சக்திவேல் பேசினார். அருகில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், ஸ்டேட் வங்கி பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா, துணை பொது மேலாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர்.

வரியில்லா ஒப்பந்தங்கள்

மகத்தான வாய்ப்பு தரும்திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் 60 சதவீதம் பங்களிக்கிறது. கடந்த 2024--25ம் ஆண்டில் 40,000 கோடி ரூபாய் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.பிரிட்டனுடன் வரியில்லா வர்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது; விரைவில் நல்ல முடிவை எட்டும்.நியூசிலாந்து போன்ற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தங்கள் சீனா, வங்கதேசம், வியட்நாம், தைவான் போன்ற நாடுகளுடன் போட்டியிட, நம் நாட்டுக்கு மகத்தான வாய்ப்பை வழங்கும்.- ஏற்றுமதியாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி