உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கல்வி புத்தாக்க பயிற்சி; 9 ஆசிரியர்கள் தேர்வு

கல்வி புத்தாக்க பயிற்சி; 9 ஆசிரியர்கள் தேர்வு

உடுமலை; பள்ளி ஆசிரியர்களிடம் கலைகள் குறித்த புரிதல் ஏற்படுத்தி, கற்பித்தலை மேம்படுத்த, மத்திய கலாசார அமைச்சகம் வாயிலாக, கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மையம் (சி.சி.ஆர்.டி.,) சார்பில், புத்தாக்கப் பயிற்சி நாடு முழுதும் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.இதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களில், 440 பேர் தேர்வாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இப்பயிற்சியில் பங்கேற்க ஒன்பது ஆசிரியர்கள் செல்ல உள்ளனர்.இவர்களுக்கு புதுடில்லி, ராஜஸ்தான், தெலுங்கானா, ம.பி., அசாம் ஆகிய மாநிலங்களில் அக்., மாதம் பயிற்சி நடக்கவுள்ளது.பொம்மலாட்டத்தின் பங்கு, இயற்கை மற்றும் பாரம்பரிய சின்னங்கள் பாதுகாப்பில் பள்ளிகளின் பங்களிப்பு, நாட்டின் கலாச்சார பன்முகத்தன்மை, பள்ளிக் கல்வியில் அருங்காட்சியகங்களின் பணிகள் உள்ளிட்ட தலைப்புகளில், மாணவ, மாணவியருக்கு கலாச்சாரம் பற்றிய விழிப்புணர்வு ஆசிரியர்கள் ஏற்படுத்த ஏதுவாக பயிற்சி வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை