மேலும் செய்திகள்
கோவில் அருகில் 'பார்' மக்கள் போராட்டம்
16-Oct-2024
உடுமலை : உடுமலை அருகே, கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, முத்தரப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.உடுமலை அருகே அனிக்கடவு ராமச்சந்திராபுரத்தில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையால், அருகிலுள்ள குடியிருப்புகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது; குளம் உட்பட நீராதாரங்களும் மாசுபடுவதாக அப்பகுதியினர் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் மனு கொடுத்தனர். இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கோழிப்பண்ணை நிர்வாகம் மற்றும் மக்கள் பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக்கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, அப்பகுதி மக்கள் குடிமங்கலம் போலீசில் விண்ணப்பித்தனர். ஆனால், போலீசார் அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில், தடையை மீறி கோழிப்பண்ணை முன் ஆர்ப்பாட்டம் நடத்த, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேற்று முயற்சித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை டி.எஸ்.பி., ஆறுமுகம் தலைமையிலான போலீசார், போராட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.கோழிப்பண்ணை பிரச்னைகள் குறித்து, மாசுகட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து விட்டு திரும்பினர்.போராட்ட அறிவிப்பையொட்டி, அனிக்கடவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு நிலவியது.
16-Oct-2024