முதியவரிடம் ரூ.35 லட்சம் மோசடி
திருப்பூர், பூம்புகார் நகர், ஹார்வி ரோட்டை சேர்ந்தவர் சம்பத், 67. இவருக்கு சொந்தமான, 10 சென்ட் நிலத்துடன் கூடிய வீடு, அப்பகுதியில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் நில உரிமை பத்திரத்துக்காக விண்ணப்பித்திருந்தார். கடந்த, 2018ம் ஆண்டு ஒருவர், சம்பத்துக்கு அறிமுகமானார். தனக்கு தெரிந்த நபர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இருப்பதாகவும், பணம் செலவழித்தால், விரைவில் நில உரிமை பத்திரம் பெற்று கொடுப்பதாகவும் கூறினார். இதனை நம்பி, ஏழு ஆண்டுகளாக பல்வேறு தவணைகளாக, 35 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தார். ஆனால், பத்திரம் வாங்கி கொடுக்க காலதாமதம் ஏற்பட்டது. ஏமாற்றப்பட்டதை அறிந்த சம்பத், வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.