உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்

தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்

தேர்தல் கமிஷன், ஓட்டளிப்பதன் அவசியம் மற்றும் ஓட்டளிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்தும், புதிய வாக்காளர்களை இணைப்பது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.'ஓட்டளிப்பதே சிறந்தது' என்ற தலைப்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப்போட்டி மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் நல்லுார் உட்பட, நான்கு இடங்களில் நடந்தது. தேர்தல் துணை தாசில்தார் வசந்தா கண்காணித்தார். இதில், உதவி கமிஷனர் கணக்கு (பொறுப்பு) தங்கவேல்ராஜன் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் மற்றும், 2வது பரிசாக, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை