உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் பொறியாளர் நியமனம்

மின் பொறியாளர் நியமனம்

திருப்பூர்; திருப்பூர் குமார் நகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் நடந்தது.மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மின்நுகர்வோர் சார்பில் மனு க்கள் வழங்கப்பட்டன.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கொடுத்த மனு: வீரபாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்ட இடுவம்பாளையம், முருகம்பாளையம், கரைப்புதுார், சின்னக்கரை பகுதிகளில், விவசாயம், தொழில், வீடுகள், வர்த்தகம் என, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. இந்த அலுவலகங்களில், உதவி மின்பொறியாளரை நியமிக்க வேண்டும். திருப்பூர் மின்பகிர்மான வட்டத்தில், இலவச விவசாய மின் இணைப்பு எண்கள், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்.

நன்றி தெரிவித்த மக்கள்

திருப்பூர், துளசிராவ் வீதியில், நீண்ட நாட்களாக மின்இணைப்பு கிடைக்காமல் இருந்தவர்களுக்கு, மின் இணைப்பு கிடைத்துள்ளது.புதிதாக இரண்டு மின்கம்பங்கள் அமைத்து, மின் இணைப்பு வழங்கியதற்காக, அப்பகுதி மக்கள், நேற்று மேற்பார்வை பொறியாளரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.நன்றி தெரிவிக்க வந்திருந்த மூதாட்டிக்கு, மேற்பார்வை பொறியாளர் சுமதி பொன்னாடை அணிவித்து பாராட்டியது, அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ