கெபாசிட்டர் இல்லாத மின் இணைப்பு அபராதம் விதிக்க மின்வாரியம் உத்தரவு மின் நுகர்வோருக்கு அடித்த ஷாக்
திருப்பூர்;'கெபாசிட்டர்' பொருத்தாத, மும்முனை மின் இணைப்புள்ள கடை மற்றும் சிறு தொழிற்சாலைகளுக்கு, அபராதம் விதிப்பதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின்வாரிய உத்தரவுப்படி, 18 எச்.பி., திறனுக்கும் அதிகமான மும்முனை இணைப்பு பெற்ற தொழிற்சாலை இணைப்புகளுக்கு, 'பவர்பேக்டர் - கெபாசிட்டர்' கட்டாயமாக்கப்பட்டது. மும்முனை மின்சாரம் சீராக வினியோகிக்கவும், அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பயன்படுத்துவதை தடுக்கவும், இத்தகைய 'கெபாசிட்டர்' பொருத்தப்பட்டது.இந்நிலையில், 3 எச்.பி.,க்கு அதிகமான, மும்முனை இணைப்பு உள்ள தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்புகளுக்கு, 'கெபாசிட்டர்' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் எவ்வித அறிவிப்பும் செய்யாமல், 'கெபாசிட்டர்' இல்லாத இணைப்புகளுக்கு, மின் கட்டணத்துடன், 3,000 முதல், 4000 ரூபாய் வரையிலான அபராதமும் விதிக்கப்படுகிறது.வீட்டு இணைப்பு நீங்கலாக, அனைத்து வகையான மும்முனை 'டேரீப்'களுக்கும், இந்த உத்தரவு, இம்மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தொழிற்சாலை மற்றும் வணிக இணைப்புகள், ஒவ்வொரு மின் கட்டணத்தின் போதும், 3000 ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.பனியன் தொழிற்சாலை போன்ற தொழிற்சாலைகளுக்கு மட்டும், இது நடைமுறையில் இருந்தது. இந்த மாதம், முதல், சிறுதொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், பெட்டிக்கடை வரை, அனைவருக்கும் கட்டாயமாகி விட்டது.நடப்பு மாதம், மின் கணக்கீடு செய்து, மின் கட்டணத்தை கணக்கிட்டு வழங்கும் போது, 2,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரையில், அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், 60 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தி சிறு தொழில்துறையினரும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'கண்டனத்துக்குரியது'தமிழ்நாடு மின்சார வாரியம், வருவாயை பெருக்க தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. மும்முனை இணைப்புள்ள, சிறுதொழில் மற்றும் வணிக இணைப்புகள், 'கெபாசிட்டர்' பொருத்த வேண்டுமென, முன்னறிவிப்பு செய்யவே இல்லை. முதலில், முன்னறிவிப்பு செய்து, போதிய அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். மாறாக, திடீரென, மின் கட்டணத்துடன் அபராதம் விதிப்பது கண்டனத்துக்குரியது.- மின்நுகர்வோர் புதிய உத்தரவு அமல்இம்மாதம் முதல், 'கெபாசிட்டர்' பொருத்தாத, 3 எச்.பி.,க்கும் அதிகமான, மும்முனை இணைப்புகளுக்கு, அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், 18 எச்.பி.,க்கு அதிக திறனுள்ள, தொழிற்சாலை இணைப்புகளுக்கான அபராதம், 5 ஆயிரம் ரூபாய் என்பது, 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணம், 'ரீடிங்' அடிப்படையில் கணக்கிடப்படும்; இணையதளத்தில் கட்டணத்தை கணக்கிடும் போது, கட்டண தொகையுடன், தன்னிச்சையாக அபராதமும் சேர்க்கப்பட்டு வருகிறது.- மின்வாரிய அலுவலர்கள்