மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
01-Jun-2025
அவிநாசி; அவிநாசி அருகே நடந்து சென்ற மின் வாரிய ஊழியர் மீது, டூவீலர் மோதியதில், அதேயிடத்தில் அவர் உயிரிழந்தார்.கோவை மாவட்டம், அன்னுார் - நாகம்மாபுதுார், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் வெள்ளிங்கிரிசாமி, 58. கருவலுார் மின்வாரிய அலுவலகத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தன்னுடன் பணிபுரியும் அலுவலர் ஒருவரின் பிரிவு உபசார விழாவில் பங்கேற்று, அலுவலகம் செல்ல அனந்தகிரி பகுதியில் நடந்து சென்றுள்ளார்.அப்போது கருவலுாரை சேர்ந்த முருகேசன் மகன் சுரேஷ், 25 என்பவர் அதிவேகமாக டூவீலர் ஓட்டி சென்று, வெள்ளிங்கிரிசாமியின் மீது மோதினார். தலையில் காயமடைந்த அதேயிடத்தில் அவர் இறந்தார். சுரேஷூம் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து, அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Jun-2025