உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிவுகள் கொட்டி மூடப்படும் நீர்வழித்தடங்கள் கண்டறிந்து மீட்க வலியுறுத்தல்

கழிவுகள் கொட்டி மூடப்படும் நீர்வழித்தடங்கள் கண்டறிந்து மீட்க வலியுறுத்தல்

உடுமலை;உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில், கழிவுகள் கொட்டி மூடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பருவநிலை மாற்றங்கள், பருவமழை பொய்த்தல் ஆகியவை காரணமாக, நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே, நீர்நிலைகளை முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது.இதில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியது, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.அவ்வகையில் உடுமலை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், துார்வாரப்படாத பல நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டும், குப்பை கொட்டப்பட்டும் துார்ந்து போயுள்ளன.அங்கு மழைநீர் தேங்காமல் வழிந்தோடுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.தற்போது, சில பகுதிகளில், ஓடை, குட்டையை கற்களால் மூடி, ஆக்கிரமிப்பு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நீர்வழித்தடம் ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் நிலத்தின் உரிமையாளர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.தன்னார்வலர்கள் கூறியதாவது: நீர்நிலைகள் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் நீர்வழிப்பாதைகள், குளக்கரைகள் ஆகியவற்றை ஆக்கிரமிக்கக்கூடாது எனும் சுப்ரீம் கோர்ட் வழிமுறைகள் உள்ளன.ஆனால், உடுமலை நகர், சில கிராமங்களில், கற்கள், கட்டடக்கழிவுகள், குப்பை உள்ளிட்ட கழிவைக் கொட்டி, நீர்நிலைகளை மூட முயற்சிக்கின்றனர்.தொடர்ந்து, அப்பகுதியில் ஏதேனும் கட்டுமானத்தை உருவாக்கி, ஆக்கிரமிப்பும் செய்கின்றனர். உள்ளாட்சி அமைப்பினர், நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை