மேலும் செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கமிஷனர் ஆஜராக உத்தரவு
15-Oct-2025
உடுமலை: உடுமலையில், நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், பிளேக்மாரியம்மன் கோவில் அருகில் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா, என அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோட்டில், டி.வி., பட்டணம் பகுதியில், பிளேக் மாரியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவிலுக்கு மத்தியில், எஸ்.என்.ஆர்.,லே- அவுட் செல்லும் வழித்தடம் உள்ளதாகவும், தற்போது தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மாயமாகியுள்ளதாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து அறிக்கை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று, உடுமலை நகராட்சி கமிஷனர் விநாயகம், அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் தீபா, சுந்தரவடிவேலு, ஆய்வர் சரவணகுமார் மற்றும் சர்வே துறை அதிகாரிகளை கொண்ட குழுவினர் அளவீடு பணி மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறுகையில்,' நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் அளவீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆவணங்கள் அடிப்படையில், அறிக்கை தாக்கல் செய்யப்படும்,' என்றனர்.
15-Oct-2025