புதர் மண்டி காணப்படும் இ.எஸ்.ஐ., மருந்தக வளாகம்
உடுமலை; உடுமலை இ.எஸ்.ஐ., மருந்தக வளாகத்தில், மரம், முட்செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுவதால், அங்கு வருவோர் பாதிக்கப்படுகின்றனர்.உடுமலையிலுள்ள, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருந்தகம் (இ.எஸ்.ஐ.,) வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெற்று வருகின்றனர்.தினமும், நுாற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்லும் நிலையில், இ.எஸ்.ஐ., மருந்தக வளாகத்தில், மரம், முட்செடிகள் முளைத்து புதர் மண்டி காணப்படுகிறது.உள்ளே நுழைய முடியாத அளவிற்கு, பல அடி உயரத்திற்கு புதர் மண்டியுள்ளதோடு, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படுகிறது.மேலும், இந்த வளாகத்திலுள்ள பழைய கட்டடங்களும், எந்நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே, பழைய கட்டடங்களை புதுப்பிக்கவும், வளாகத்தை துாய்மைப்படுத்தவும் வேண்டும்.