உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இப்படியும் டெக்னிக் ; ஏமாந்தால் பைக் மாயம்

இப்படியும் டெக்னிக் ; ஏமாந்தால் பைக் மாயம்

திருப்பூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்தவர் சிவா, 27. தற்போது சேலம், முத்துநாயக்கன்பட்டியில் வசிக்கிறார். சிவா கடந்த சில மாதங்களாக பைக் வாங்குவது போல் நடித்து, சில இடங்களில் அவற்றை திருடிச் சென்றுள்ளார். கடந்த வாரம் காங்கயத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பைக்கை விற்பனை செய்வதாக, சமூக வலை தளத்தில் பதிவிட்டார். காங்கயம் வந்து அவரைச் சந்தித்த சிவா, அந்த பைக்கை வாங்குவது போல் பேசியுள்ளார். அதன்பின், அதனை ஓட்டிப் பார்ப்பதாக கூறி எடுத்துச் சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.இது குறித்த புகாரின் பேரில், காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு, இதில் ஈடுபட்ட சிவாவை கைது செய்தனர். அவரிடமிருந்து இது போல் திருடிச் சென்ற நான்கு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை