வாசகர்கள் கருத்துகள் ( 1 )
திருட்டு திராவிட ஒன்கொள் தெலுங்கன் தமிழன் என்று சொல்லி ஆளும் போது எதுவும் போலி என்று ஆகலாம்...
மேலும் செய்திகள்
மாநில கபடி போட்டி பல்லடம் அணி வெற்றி
28-Sep-2024
பல்லடம் : போலி தங்க பிஸ்கட்டுகளுக்காக நடந்த பரிமாற்றத்தில், பிரபல ரவுடி ஒருவர் உட்பட, 14 பேரை, பல்லடம் போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், தொப்பம்பட்டியை சேர்ந்த கருமலை 50, உத்தமபாளையத்தை சேர்ந்த முருகன், 42 மற்றும் பல்லடம் - மகாலட்சுமி நகரை சேர்ந்த மாரியப்பன் 53. இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, தங்க பிஸ்கட் வாங்கி விற்பனை செய்ய திட்டமிட்டனர்.இதற்காக, ஒரு போலி தங்க பிஸ்கட், 500 ரூபாய் என்ற கணக்கில், 5 பிஸ்கட் ஆன்லைனில் வாங்கி, அவற்றை ஒரிஜினல் தங்க பிஸ்கட் என்று கூறி, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக, ஈரோட்டை சேர்ந்த சுரேஷ், 38 மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த அர்ஜுன், 35 ஆகிய இடைத்தரகர்களை நாடினர். பல்லடம் அடுத்த, மகாலட்சுமி நகரில் வைத்து தங்க பிஸ்கட்டை கைமாற்றலாம் என, இரு தரப்பினரும் முடிவு செய்தனர். இந்த தகவல் எப்படியோ, நாமக்கல்லைச் சேர்ந்த ரவுடி காசிராஜ், 34 என்பவருக்கு தெரிந்தது. இதனை தொடர்ந்து, காசிராஜ் உட்பட இவரது கூட்டாளிகள் விஜிகுமார், 40, கோபிநாத், 34, கிருஷ்ணன், 27, சுரேஷ், 38, ரகு, 40, மணிராஜ், 21 மற்றும் மணி, 29 ஆகிய எட்டு பேர் கொண்ட கும்பல், பல்லடத்துக்கு வந்தனர். கருமலை மற்றும் கும்பலிடம் இருந்து கைமாறும் தங்க பிஸ்கட்டுகளை பறித்துச் செல்ல திட்டமிட்டனர். இது குறித்த தகவல் பல்லடம் போலீசருக்கு தெரிய வர, போலீசார் அனைவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து, கார், 2 கத்தி, ஹாக்கி பேட் 1 மற்றும் 5 தங்க பிஸ்கட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, பல்லடம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின்பேரில், திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர். ஆன்லைனில் வாங்கிய போலி தங்க பிஸ்கட்டுக்காக நடந்த இச்சம்பவத்தில், பிரபல ரவுடி உட்பட, 14 பேரும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
திருட்டு திராவிட ஒன்கொள் தெலுங்கன் தமிழன் என்று சொல்லி ஆளும் போது எதுவும் போலி என்று ஆகலாம்...
28-Sep-2024