உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூடுதல் போனஸ் எதிர்பார்ப்பு

கூடுதல் போனஸ் எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் சி.ஐ.டி.யூ., பொது தொழிலாளர் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம், துணை தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடந்தது. செயலாளர் சுப்ரமணியன், துணை தலைவர் உண்ணிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.சாம்சங் நிறுவன ஊழியர் பிரச்னையில் தமிழக அரசு சுமுக தீர்வு காண வேண்டும். திருப்பூரில், டையிங் பேக்டரி, ரைஸ் மில் உள்ளிட்ட பல்வேறு மில்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விலைவாசி உயர்வு கருதி, கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகைக்கு 15 நாள் முன்னதாக இது வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ