மேலும் செய்திகள்
ஒரு ரூபாய் கூட யாரிடமும் வாங்கியது இல்லை!
30-Mar-2025
பொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கெருடமுத்துாரை சேர்ந்த விவசாயி பொன்முத்து தலைமையிலான குழுவினர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிவன் இயற்கை சந்தை என்ற பெயரில் பல்லடம், திருப்பூர் நொச்சிப்பாளையம் ஆகிய இடங்களில் இயற்கை காய்கறிகளை சந்தைப்படுத்தி வருகின்றனர்.இயற்கை விவசாயிகள் - நுகர்வோர் சந்திப்பு கூட்டம், குண்டடம், ஈஸ்வர செட்டிபாளையம் சுரேஷ் தோட்டத்தில் நடந்தது. அங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை நுகர்வோர் நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளிடம் தங்கள் சந்தேகத்தை கேட்டறிந்தனர். உரம், மருந்து பயன்படுத்துவதில்லை; திட்டமிட்டு குழுவாக சாகுபடி செய்கிறோம் என்று விவசாயிகள் நுகர்வோருக்கு விளக்கம் அளித்தனர்.திருப்பூர் வடக்கு பகுதியிலும் இயற்கை காய்கறி சந்தையை கொண்டு வர வேண்டும் என்று நுகர்வோர் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.கோவை, இருகூர் பகுதியைச் சேர்ந்த இயற்கை விவசாயி தங்கவேல் பேசுகையில், ''இடுபொருட்களை நாமே தயாரிப்பதே இயற்கை விவசாயம். இயற்கை உணவு சாப்பிட்டால் ஆரோக்கியம் வரும். இயற்கை விவசாயிகளை உருவாக்க வேண்டும். நுகர்வோர் இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கலாம். இயற்கை விளைபொருட்கள் விலை சற்று கூடுதலாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு நல்ல உணவு தர வேண்டும். பூச்சி தாக்கினால் பச்சிலை கரைசல் தெளிக்கலாம். பயிர்களுக்கு ஜீவாமிர்தம் கொடுத்தால், மண்ணில் சத்து அதிகரிக்கும். நோய் வந்தால் சொத்து போய்விடும். பத்து நாள் வாழ்ந்தாலும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்'' என்றார்.
30-Mar-2025