உபயோகமற்ற கட்டடம் இடித்து அகற்ற எதிர்பார்ப்பு
பொங்கலுார்; கொடுவாயில் ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், 20 ஆண்டுகள் முன்பு கணினி அறை கட்டப்பட்டது.சில ஆண்டுகளாக அந்த அறை பூட்டியே கிடக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் காரை பெயர்ந்து கீழே விழுகிறது. அருகில் அரசு பள்ளிகள், வி.ஏ.ஓ., அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. அது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் பகுதி. அவர்கள் தலையில் இடிந்து விழுந்தால் உயிருக்கு ஆபத்தாய் முடிந்து விடும்.பாழடைந்து வரும் அந்த கட்டடத்தை போதிய பராமரிப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அதனை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.