உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீமை கருவேல மரங்களால் பாதிப்பு  அணை கரையில் அகற்ற எதிர்பார்ப்பு

சீமை கருவேல மரங்களால் பாதிப்பு  அணை கரையில் அகற்ற எதிர்பார்ப்பு

உடுமலை:திருமூர்த்தி அணைக்கரையில், சீமை கருவேல மரங்களை அகற்றி விட்டு, மாற்று மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணை வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி., திட்டத்தின் கீழ், பாசன வசதி பெற்று வருகின்றன. அணையின் கரை, சுமார், 8,622 அடி நீளத்துக்கு, அமைந்துள்ளது.இதில், பிரதான கால்வாய் ஷட்டர் பகுதியில் இருந்து, பாலாறு உபரிநீர் ஷட்டர் வரை, அணை கரையில், சீமைக்கருவேல மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.ரோட்டுக்கு, அணை கரைக்கும் இடையில், ஆயிரக்கணக்கான இம்மரங்கள் நீண்ட காலமாக அகற்றப்படாமல் உள்ளது.இப்பகுதியில், பூங்கா அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், வேறு மரங்கள் எதுவும் வளராத அளவுக்கு, இந்த மரங்கள் அடர்த்தியாக ஆக்கிரமித்துள்ளன.பல வகைகளில், இவ்வகை மரங்களின் விதைகள் வேகமாக விளைநிலங்களுக்கும் பரவுகிறது.ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது: திருமூர்த்தி அணை கரையிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை; வனத்துறையினரும் கண்டுகொள்ளவில்லை.தற்போது, பல கி.மீ., துாரத்துக்கு அணை கரையில், வேறு மரங்களே இல்லை. இதனால், அணை பொலிவிழிந்தது போல் காணப்படுகிறது.எனவே, கரையிலுள்ள இவ்வகை மரங்களை அகற்றி விட்டு, வேறு மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.இதனால், பாசன நீர் வழியாக, சீமைக்கருவேல மரங்கள் பரவுவதும் தவிர்க்கப்படும். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !