உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு?

தபால் அலுவலகத்தை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு?

பல்லடம்; -பல்லடம் தபால் அலுவலகத்தை, தலைமை தபால் அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.பல்லடம் வட்டாரத்தில், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விசைத்தறி, கறிக்கோழி பண்ணைகள், சாய ஆலைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்களை சார்ந்து, வட மாநில மற்றும் தென் மாவட்ட தொழிலாளர்கள் பல லட்சம் பேர் வசிக்கின்றனர். தொழில் ரீதியான பரிவர்த்தனைகள் மற்றும் மணியார்டர், தபால் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும், பல்லடம் தபால் அலுவலகம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.பொதுமக்கள் சிலர் கூறியதாவது: பல்லடம் அக்ர ஹார வீதியில், தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கிளை தபால் அலுவலகம், கட்டடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துடன், திடீரென மூடுவிழா நடத்தப்பட்டது. வேலை வாய்ப்பு, அரசு துறைகள் சார்ந்த கடிதப் போக்குவரத்து, பார்சல், பதிவு மற்றும் விரைவு தபால், மணியார்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவும், தபால் அலுவலக சேவை பெரிதும் பயன்படுகின்றன.தொழில் துறையினர், தங்களது தொழில் சார்ந்த கடிதப் போக்குவரத்துக்கு, தபால் துறை சேவையையே நம்பி உள்ளனர். பல்லடம் தபால் அலுவலக பதிவு, விரைவு தபால் அனுப்பும் சேவை, 4.30 மணியுடன் முடிவதால், திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் சென்று அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. வாகன போக்குவரத்து நெரிசலுக்கு இடையே திருப்பூர் சென்று தபால் அனுப்புவது சாத்தியமற்றது. எனவே, பல்லடம் தபால் அலுவலகத்தை, தலைமை தபால் அலுவலகமாக தரம் உயர்த்த வேண்டும். மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு, பாஸ்போர்ட் உள்ளிட்ட சேவைகளையும் கொண்டு வர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்.பல்லடம் தபால் அலுவலகத்தில், மாலைங, 3.00 மணி வரை மட்டுமே பதிவு தபால்கள் பெறப்பட்டு வந்தன. சமூக ஆர்வலர்களின் கோரிக்கையால், மாலை, 4.30 மணி வரை பதிவு தபால் பெற, நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை