உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒசைரி நுால் விலை மேலும் குறையுமா... எதிர்பார்ப்பு! பஞ்சு விலை குறைவால் தொழில்துறை நிம்மதி

ஒசைரி நுால் விலை மேலும் குறையுமா... எதிர்பார்ப்பு! பஞ்சு விலை குறைவால் தொழில்துறை நிம்மதி

திருப்பூர்: பஞ்சு விலை மென்மேலும் குறைந்து வருவதால்திருப்பூரில் உள்ள நிறுவனங்கள், பின்னலாடை தயாரிப்புக்காக, பருத்தி நுாலிழையாகிய ஒசைரி நுாலிழையை பயன்படுத்துகின்றனர். இவ்வகை நுாலிழையை பின்னல் துணியாக மாற்றி, அதிலிருந்து, உள்ளாடைகள், பின்னலாடைகள் தயாரிக்கப்படுகின்றன. வியாபாரிகள் பஞ்சை வாங்கி பதுக்கி வைத்த காரணத்தால், உள்நாட்டு தேவையில் தட்டுப்பாட ஏற்பட்டது. இதன்காரணமாக, பஞ்சு விலை, கேண்டி, 71 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. போர்ச்சூழல் காரணமாக, பாலியஸ்டர் நுால் விலை, வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, பருத்தி நுால் விலையும் உயர்ந்துள்ளது. மத்திய அரசு, தாமதமாக நடவடிக்கை எடுத்தாலும், ஜூன் 1 முதல், அக்., 31 வரை, பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளது. சர்வதேச சந்தையிலும் விலை குறைந்து வருவதால், இந்தியாவிலும் நுால் விலை குறைந்து வருகிறது. இருப்பினும், பஞ்சு விலை 63 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது; அதற்கு ஏற்ப நுால்விலையை குறைக்க வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

வரவேற்கிறோம்!

---------------- - சுப்பிரமணியன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தலைவர் இக்கட்டான சூழலில், நுால்விலை, 15 நாட்கள் இடைவெளியில் குறைக்கப்பட்டதை வரவேற்கிறோம். இருப்பினும், பஞ்சு விலை குறைவுக்கு ஏற்ப நுால்விலையை குறைக்க வேண்டும். அப்போதுதான், வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக புதிய ஆர்டர்களை பெற்று, உற்பத்தியை துவக்க ஏதுவாக இருக்கும். பஞ்சு விலை நிலையாக இருக்க, ஆண்டுதோறும் சில மாதங்கள், பஞ்சு இறக்குமதிக்கான வரியை நீக்கம் செய்ய வேண்டும்.

இன்னும் குறையணும்!

------------------- - சண்முகசுந்தரம் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) தலைவர் நுால் விலை கிலோவுக்கு, 70 ரூபாய் வரை உயர்ந்தது; 20 ரூபாய் மட்டும் விலை குறைந்துள்ளது. நுால் விலை குறைந்தாலும், பல்வேறு வகையில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மீண்டும் இயல்பு விலைக்கு வந்தால் மட்டுமே, உற்பத்தி பணிகளை துவக்க முடியும். நுால் விலை குறைய வேண்டுமென்ற நோக்கில், மத்திய அரசு பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்தது. ஆனால், பஞ்சு விலை குறைந்தளவுக்கு, நுால் விலை குறையவில்லை. எனவே, நுால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழைய விலைக்கு...

------------------- - முத்துரத்தினம் திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பஞ்சு விலை உயர்ந்ததும், நுால் விலை அதிரடியாக உயர்த்தப்படுகிறது. நுால்விலையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் நிர்ணயிக்க வேண்டும். பஞ்சு விலை அதிக அளவு குறைந்துள்ளதால், நுால்விலை மேலும் குறைக்கப்பட வேண்டும். பழைய விலைக்கு வந்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆர்டர்களை ஒப்பந்தம் செய்ய ஏதுவாக இருக்கும். இதுதவிர, போட்டி நாடுகளை சமாளித்து கூடுதலான ஆர்டர்களை பெறவும் ஏதுவாக இருக்கும்.

பதுக்கல் பஞ்சு வந்தது

-------------------- - ரவிச்சந்திரன் திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம் பொது செயலாளர் பஞ்சுக்கான இறக்குமதி வரியை ரத்து செய்த பின், பதுக்கி வைத்திருந்த பஞ்சு மெதுவாக வெளியே வருகிறது. இதன் காரணமாக, பஞ்சு விலை குறைந்து வருகிறது. பஞ்சு விலைக்கு ஏற்ப நுால்விலையை குறைக்க வேண்டும். நுால்விலை இதுவரை, கிலோவுக்கு, 20 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது; மொத்தம், 50 ரூபாய் வரை விலை குறைய வேண்டும். அப்போது தான் தொழில் துறையினர் உண்மையில் பயனடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ