உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிராண்ட் பெயரில் போலி ஆடைகள்

பிராண்ட் பெயரில் போலி ஆடைகள்

திருப்பூர் : பிரபல நிறுவனத்தின் பிராண்ட் பெயரில் போலியாக ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியம், 29. இவரது நிறுவனத்தின் பெயரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி செய்து வருகிறார். அவிநாசிலிங்கம்பாளையத்தில் இவரது நிறுவனம் உள்ளது. இவரது நிறுவன பிராண்ட் பெயரில் போலியாக சிலர் ஆடைகள் தயாரித்து மோசடியாக விற்பனை செய்வது தெரிந்தது. அவரது நிறுவன மேலாளர் சஞ்சய் இது குறித்து வேலம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடைகள் சிவசுப்ரமணியம் நிறுவன பிராண்ட் பெயரில் போலியாக தயாரித்து விற்பனைக்கு தயார் செய்வது தெரிந்தது. போலீசார் இது குறித்தும் இதில் ஈடுபட்ட நபர்கள் குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை