மேலும் செய்திகள்
உழவர் சந்தைகள் முடக்கம் 194 கடைகளில் 124 மூடல்
12-Sep-2024
பொங்கலுார்: ஆவணி மாதத்தில் முருங்கை சீசன் காரணமாக விலை கடுமையாக சரிந்தது. கிலோ பத்து ரூபாய்க்கு விலை போனது. பறிப்பு கூலிக்கு கூட கட்டுப்படியாகாமல் விவசாயிகள் மிகவும் வேதனைப்பட்டனர்.புரட்டாசி மாதம் துவங்கியவுடன் முருங்கை வரத்து படிப்படியாக குறைந்தது. ஹிந்துக்கள் புரட்டாசி விரதம் கடைப்பிடிப்பதால் சைவ உணவுக்கு மாறி உள்ளனர். இதனால், காய்கறிகளின் தேவையும் அதிகரித்துள்ளது. தேவைக்கும் விளைச்சலுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.திருப்பூர் உழவர் சந்தையில் நேற்று அதிகபட்சமாக கிலோ, 100 ரூபாய்க்கு விற்பனையானது. இனி அடுத்த முருங்கை சீசன் மாசி, பங்குனி மாதங்களில் தான் துவங்கும். அதுவரை பெரிய அளவில் வரத்து இருக்காது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் திருமண சீசன் களை கட்டுவதால் முருங்கை விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
12-Sep-2024