உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

கொத்தமல்லி சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம்

உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது. புரட்டாசி மாதம் மற்றும் முகூர்த்த சீசனில், காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.எனவே, அந்த சீசனை இலக்காக வைத்து, தக்காளி, கத்தரி, வெண்டை உட்பட சாகுபடிகளுக்கான பணிகளை மேற்கொள்கின்றனர்.மேலும், தழை தேவைக்காக, கொத்தமல்லி சாகுபடியும் செய்கின்றனர். இதற்காக வீரிய ரக விதைகள் பயன்படுத்தப்படுகிறது. ஏக்கருக்கு, 12 கிலோ வரை விதைகளை பயன்படுத்தி நடவு செய்து, சொட்டு நீர் பாசன முறையில், தண்ணீர் வழங்குகின்றனர்.செடிகளை, 45 நாட்கள் வரை பராமரித்து, அறுவடை செய்து, கட்டுகளாக கட்டி, விற்பனை செய்கின்றனர். ஐப்பசி மாதத்தில், முகூர்த்த சீசனில், தழை கொத்தமல்லிக்கு, நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை