உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெங்காயம் இருப்பு; விவசாயிகள் ஆர்வம்

வெங்காயம் இருப்பு; விவசாயிகள் ஆர்வம்

பொங்கலுார்; வைகாசி பட்டத்தில் ஏராளமான விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்திருந்தனர். அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். முதல் தர வெங்காயம் அதிகபட்சம், 43 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஆனால், இரண்டாம் தர வெங்காயம் உள்ளூர் சந்தையில் மட்டுமே விற்பனையாகிறது. அவற்றை கிலோ, 15 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். உள்ளூர் சந்தையில் பெரிய வெங்காயம் பத்து முதல், 15 ரூபாய் வரை விலை போகிறது. பெரிய வெங்காய விலை சரிவு சின்ன வெங்காய விலையையும் பாதித்துள்ளது.சின்ன வெங்காயத்துக்கு, உற்பத்தி செலவு தற்பொழுது அதிகரித்துள்ளது. குறைந்த விலைக்கு வெங்காயத்தை விற்பனை செய்தால் போட்ட முதலை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்று விவசாயிகள் எண்ணுகின்றனர். தற்பொழுது தேவையை விட வரத்து அதிகரித்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை சீசன் முடிந்துவிடும். நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகைகள் வர உள்ளது. அப்பொழுது விலை அதிகரிக்கும். பருவநிலையும் சாதகமாக அமைந்துள்ளது. எனவே, விவசாயிகள் விலை உயர்வை எதிர்பார்த்து அறுவடை செய்யும் வெங்காயத்தை வெயிலில் உலர்த்தி வருகின்றனர். நன்கு உலர்ந்த வெங்காயத்தை திறந்தவெளியில் பட்டறை அமைத்து இருப்பு வைக்க துவங்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை