உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மான்களால் பயிர் பாதிப்பு ; விவசாயிகள் கோரிக்கை

மான்களால் பயிர் பாதிப்பு ; விவசாயிகள் கோரிக்கை

- நமது நிருபர் -திருப்பூர் அருகே, பயிர்களை நாசம் செய்யும் மான்களை வனத்துக்குள் விட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊத்துக்குளி ஒன்றியம், காவுத்தாம் பாளையம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.நிலக்கடலை, சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள காடுகளில் அதிக அளவில் மான்கள் வசித்து வருகின்றன.மான்கள் இரவு நேரத்தில் விளைநிலங்களில் புகுந்து அங்குள்ள பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.காவுத்தாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி முருகசாமி, 53, என்பவர் மான்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஷ்டஈடு கேட்டும் அங்கு சுற்றி திரியும் மான்களை பிடித்து வன பகுதியில் விட வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.வருவாய் துறையினர், வனத்துறையினர் நேற்று அங்கு வந்து ஆய்வு மேற்கொண்ட பின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி