மேலும் செய்திகள்
கர்நாடகா மக்காச்சோளம் கொள்முதலில் ஆர்வம்
04-Nov-2024
உடுமலை ; மக்காச்சோள சாகுபடியில், கதிர்கள் பிடித்து அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், கிராமங்களிலுள்ள உலர்களங்களை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம் மற்றும் பருவமழை ஆதாரமாக கொண்டு மானாவாரியிலும், மக்காச்சோளம் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது பயிர்களில், கதிர் பிடித்து, அறுவடைக்கு தயாராகி வருகிறது. இச்சாகுபடியில் அறுவடைக்கு பிறகு, மக்காச்சோளத்தை காய வைத்து தரம் பிரித்து, விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.இதற்காக அனைத்து கிராமங்களிலும், நீர்வள நிலவள திட்டம் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களின் கீழ் உலர்களங்கள் கட்டப்பட்டது.தொடர் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால், உலர்களங்கள் சேதடைந்து சில இடங்களில், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், விவசாயிகள் மக்காச்சோளத்தை கான்கிரீட் ரோடுகளில் காய வைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வாக, வேளாண்துறை வாயிலாக உலர்களங்களை கணக்கெடுத்து, சிறப்பு நிதி ஒதுக்கி, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்; அறுவடை சீசன் துவங்கும் முன் இப்பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, குடிமங்கலம் வட்டார விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
04-Nov-2024