மேலும் செய்திகள்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
19-Oct-2024
திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கம் அறை எண் 240ல், வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 10:30 மணிக்கு துவங்கி நடைபெறும் கூட்டத்துக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகிக்கிறார். அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கவேண்டும். பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்துக்கு ஒருவர் வீதம், பிரச்னைகளை தொகுத்து பேசலாம். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் உதவி மையம் அமைக்கப்படுகிறது. நுண்ணுயிர் பாசனம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும்.
19-Oct-2024