உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகளே, இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்

விவசாயிகளே, இயற்கை வேளாண் விஞ்ஞானிகள்

பல்லடம், ; ''விவசாயிகளே, இயற்கை விவசாயத்துக்கான விஞ்ஞானிகள்'' என, பல்லடத்தில் நடந்த இயற்கை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் புகழாரம் சூட்டினார்.வரும், செப்., மாதம் கோவை கொடிசியாவில் நடக்கவுள்ள தேசிய இயற்கை வேளாண்மை மாநாடு குறித்த வழிகாட்டல் கூட்டம், பல்லடம் வனம் அமைப்பின் அடிகளார் அரங்கில் நடந்தது.தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்புத் தலைவர் வாழை கருப்பையா, திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாண்டியன் பேசியதாவது:விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்பு வேண்டும் என்பதுதான் அனைத்து விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. விவசாயிகள் தான் இயற்கை விவசாயத்துக்கான விஞ்ஞானிகள். படித்த பட்டதாரிகளால் முடியாது.விவசாயிகளால் விளைவிக்க முடியுமே தவிர; சந்தைப்படுத்துவது என்பது, விவசாயிகள் உட்பட, சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.இந்த குழுவானது, உற்பத்திக் காலம் முதல் விவசாயிகளுடன் பங்கேற்க வேண்டும். சந்தைப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். உரிய விலை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். விவசாய விளைபொருட்கள் மட்டுமின்றி, உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களுக்குமே இந்த விதிமுறை பொருந்தும்.உற்பத்தி, சந்தைப்படுத்துதல் என, மாவட்டங்கள், ஒன்றியங்கள் வாரியாக ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப பிரச்னைகள் மாறுபடுகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை