உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜம்புக்கல் மலையை மீட்கணும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு

ஜம்புக்கல் மலையை மீட்கணும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மனு

உடுமலை, ; அரசுக்கு சொந்தமான ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பை அகற்றவும், போலி ஆவணங்கள் குறித்த விசாரணை அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும், என ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், உடுமலையில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ஜமாபந்தி அலுவலரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது:உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார் கிராமத்திலுள்ள ஜம்புக்கல் மலைப்பகுதியில், நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பட்டாக்களில் பலவற்றை, ஆள்மாறாட்டம் செய்து, பல போலி ஆவணங்கள் தயாரித்து, ஜம்புக்கல் எஸ்டேட் என்ற பெயரில், விவசாயிகள் நிலத்தை அபகரித்துள்ளனர்.சாதாரண விவசாயிகள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால், இழுத்தடிக்கும் அதிகாரிகள், போலி ஆவணங்கள் மற்றும் அரசு நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர்.மேலும், அரசுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், மலையையும் ஆக்கிரமித்து, ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், கேட் மற்றும் கம்பி வேலி அமைத்து, தடுத்து வருகின்றனர்.கடந்த, 5 ஆண்டுகளாக விவசாயிகள் பல முறை மனு அளித்தும், அரசு துறை அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சட்ட விரோதமாக முறைகேடான ஆவணங்கள் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்யப்பட்ட பட்டாக்களை ரத்து செய்யவும், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி, கேட் ஆகியவற்றை அகற்றி, அரசுக்கு சொந்தமான மலையை மீட்க வேண்டும்.விவசாயிகள் கொடுத்த மனுக்கள், அரசு நிலம் ஆக்கிரமிப்பு மற்றும் முறைகேடான ஆவணங்கள் குறித்து கோட்டாட்சியர் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிட்டு, அரசுக்கு சொந்தமான மலையிலுள்ள தனியார் ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி, மீட்க வேண்டும்.இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை