உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மண்ணுக்குத் தீங்கற்ற குப்பைகள் விலைக்கு வாங்க விவசாயிகள் தயார்

மண்ணுக்குத் தீங்கற்ற குப்பைகள் விலைக்கு வாங்க விவசாயிகள் தயார்

கு ப்பைகளை விவசாயிகள் தங்கத்துக்கு நிகராக போற்றுகிறார்கள். விவசாயிகள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் கழிவுகளை ஓரிடத்தில் கொட்டி வைத்து மக்க வைத்து உரமாக பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் சேர்த்து வைக்கும் குப்பை போதுமானதாக இல்லை. ஊர் ஊராகச் சென்று பொதுமக்கள் சேகரித்து வைக்கும் குப்பைகளை விலைக்கு வாங்குவது விவசாயிகள் வழக்கம். தற்போது சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதற்கு இணையாக குப்பைகளின் அளவும் அதிகரிக்க வேண்டும். மேய்ச்சல் நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதால் கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகள் விலை கொடுத்தாலும் போதுமான குப்பை கிடைக்காத நிலை உள்ளது. பல்லடம் பகுதியில், கோழிப்பண்ணைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. அவற்றிலிருந்து கிடைக்கும் கழிவுகளை உரமாக பயன்படுத்துகின்றனர். தற்போது அதற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. சீசன் காலங்களில் கோழிக்கழிவுகளை வாங்க ஆர்டர் கொடுத்துவிட்டு மாத கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. விவசாயிகளின் நிலை இவ்வாறு இருக்க மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடம் தேடி அலைகிறது. விவசாயிகள் பிளாஸ்டிக்கை பூலோக எதிரியாக பார்க்கின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால் மண் வளம், நீர் வளம் கெட்டு விவசாயமே அழிந்து போகும். இதனால்தான் மாநகராட்சி குப்பைகளை விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். மண்ணுக்கு தீங்கு விளைவிக்காத பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி இல்லாத மக்கும் குப்பைகளை மாநகராட்சி கொடுத்தால் விவசாயிகள் குப்பைகளை விலை கொடுத்து வாங்குவர். குப்பை என்ற பெயரில் விஷத்தை கொட்டினால் யார் தான் ஏற்றுக் கொள்வர்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை