உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குளங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

குளங்களை ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

--நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான குளங்களில் வண்டல் மண்ணே கிடையாது. உப்பாறு, கத்தாங்கண்ணி உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய குளங்களில் மட்டுமே வண்டல் மண் உள்ளது. வண்டல் மண் பெயரளவுக்கு கூட இல்லாத குளங்களில் எல்லாம், வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்துள்ளனர். விவசாயிகள் என்ற போர்வையில் மண் கடத்தல் வியாபாரிகள் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்து உள்ளனர். இதனால் குளக்கரை சேதம் அடையும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களையும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை