உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜி.எஸ்.டி., ரத்து கோரி உண்ணாவிரதம்

ஜி.எஸ்.டி., ரத்து கோரி உண்ணாவிரதம்

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வினியோகம் குறித்த கள ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார்.எம்.எல்.ஏ.,க்கள் ஆனந்தன், விஜயகுமார், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குணசேகரன், நடராஜன், அமைப்பு செயலாளர் சிவசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொறுப்பாளர் வேலுமணி, வட்ட பொறுப்பாளர் தாமோதரன், அமைப்புச் செயலாளர் அருணாசலம் ஆகியோர் வாக்காளர் அடையாள அட்டை வினியோகம் குறித்து ஆய்வு செய்தனர்.திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் காங்கயம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அடையாள அட்டை வினியோகம் குறித்து ஆய்வு நடந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் லோகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,''எப்போது தேர்தல் வந்தாலும் திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம் தொகுதிகளில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும். இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப தயாராகிவிட்டனர். அ.தி.மு.க., ஆட்சிக்காக காத்திருக்கின்றனர். மத்திய அரசு, வணிக நோக்கத்தில் பயன்படுத்தப்படும் வாடகை கட்டடங்களுக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, பாதிப்பில் உள்ள திருப்பூர் மிகவும் பாதிக்கப்படும்.ஜி.எஸ்.டி., வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி